Paristamil Navigation Paristamil advert login

‛இனிமேல்' ஆல்பம் எப்படி இருக்கு?

‛இனிமேல்' ஆல்பம் எப்படி இருக்கு?

25 பங்குனி 2024 திங்கள் 14:18 | பார்வைகள் : 6787


கமல்ஹாசன் தயாரிப்பில், அவரே பாடல் வரிகள் எழுத உருவாகி உள்ள இசை ஆல்பம் ‛இனிமேல்'. கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஆல்பத்திற்கு இசையமைத்து பாடி, நடித்துள்ளார். அவருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தபாடலுக்கான முன்னோட்டம் வெளியானது. அதில் லோகேஷ், ஸ்ருதி இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர்.

இதை வைத்து நிறைய மீம்ஸ்களும், விமர்சனங்களும் வந்தன. குறிப்பாக லோகேஷை குறிப்பிட்டு நடிகை காயத்ரி, ‛‛உங்க படத்துல ஹீரோயின் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டுவீங்க ஆனா நீங்கள்... என்ன லோகேஷ் இது'' என கலாய்த்து இருந்தார்.

இந்நிலையில் இந்த ஆல்பம் இன்று வெளியிடப்பட்டது. இந்தக்காலத்து ஆண் - பெண் இடையே ஏற்படும் காதல், அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸ், நெருக்கம், திருமணம் பின்னர் துவங்கும் சிறுசிறு மோதல்கள் பெரிதாக மாறி பிரிவது மாதிரியான காட்சிகளை உள்ளடக்கி இந்த ஆல்பம் எடுக்கப்பட்டுள்ளது. லோகேஷ், ஸ்ருதி இருவரும் இயல்பாய் நடித்துள்ளனர். ஆங்கிலம் கலந்த தமிழ் உடன் ஸ்ருதியின் ஸ்டைலான குரல் தனித்துவமாக தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்