Paristamil Navigation Paristamil advert login

Essonne : நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு! - பெண் பலி!

Essonne : நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு! - பெண் பலி!

25 பங்குனி 2024 திங்கள் 11:00 | பார்வைகள் : 11749


Saint-Michel-sur-Orge (Essonne) நகரில் உள்ள வீடு ஒன்று சனிக்கிழமை நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

மார்ச் 23-24 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் 2 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் நிலமை ஏற்கனவே கைமீறிச் சென்றிருந்தது.

வீடு முற்றாக தீக்கிரைக்குள்ளாகி 61 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் Sainte-Geneviève-des-Bois நகர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்