Paristamil Navigation Paristamil advert login

56 கனேடியர்களுக்கு விதித்துள்ள அதிரடி தடை  ரஷ்யா 

56 கனேடியர்களுக்கு விதித்துள்ள அதிரடி தடை  ரஷ்யா 

24 பங்குனி 2024 ஞாயிறு 10:24 | பார்வைகள் : 7688


கனடாவில் உள்ள 56 குடிமக்களுக்கு ரஷ்யாவானது உடன் நடைமுறைக்கு வரும் வகையில்  அதிரடி தடையை விதித்துள்ளதாக மாஸ்கோ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த பட்டியலில் உள்ளவர்கள் "OUN-UPA மற்றும் கலீசியா பிரிவைச் சேர்ந்த ஹிட்லரின் ஆதரவாளர்களை புகழ்ந்து பேசும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என ரஷ்யா காரணம் வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகள் வாங்கினால் ஏற்படப்போகும் நெருக்கடி புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகள் வாங்கினால் ஏற்படப்போகும் நெருக்கடி உக்ரேனிய தேசியவாத சக்தி அத்துடன் அதிகாரிகளால் தூண்டப்பட்ட ருஸ்ஸோபோபிக் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்பவர்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

56 கனேடியர்களுக்கு ரஷ்யா விதித்த அதிரடி தடை OUN-UPA என்பது உக்ரேனிய தேசியவாத சக்தியாகும், இது இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பின் போது சோவியத் ஆட்சிக்கு எதிராகப் போராடிய அமைப்பாக கருதப்படுகிறது.

கலீசியா பிரிவு என்பது சோவியத்துக்கு எதிராகப் போராட ஜேர்மன் நாஜி கட்சியின் ''வாஃபென் SS கார்ப்ஸால்'' ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உக்ரேனிய தன்னார்வப் படை என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்