Pavillon-sous-Bois : ‘சட்டவிரோதச் செயலில்’ ஈடுபட்ட பத்து பேர் கைது!

24 பங்குனி 2024 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 15313
Pavillon-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த பத்து பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் இணைந்து ”TEAM JOHN WICK” என பெயரிட்டு ‘நூதனமுறையில்’ போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளுவதற்கு வசதியாக ‘வாடிக்கையாளர் அழைப்பு மையம்’ (call-center) ஒன்று நிறுவியுள்ளனர். அதன் வழியாக வாடிக்கையாளர்கள் உரையாடி தங்களுக்குத் தேவையான போதைப்பொருட்களை பதிவு செய்துகொள்ள முடியும் எனவும், பொருள் கைமாறும் இடத்தையும் தீர்மானித்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது மாத வருமானமாக €150,000 இல் இருந்து €300,000 யூரோக்கள் வரை இருந்துள்ளதாகவும், Pavillon-sous-Bois நகரில் சீசா புகைத்தல் விடுதி ஒன்று நடத்தி வந்ததாகவும், வெளிப்பார்வைக்கு விடுதி போலவும் - பின் பக்கத்தினால் போதைப்பொருள் கடத்தல் தொழிலும் மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இந்த கைது சம்பவம் இடம்ப்பெற்றிருந்தது. அவர்கள் அனைவரும் 24 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025