பரிஸ் : கத்தியால் குத்தப்பட்ட பெண் - தற்கொலை செய்துகொண்ட நபர் - இருசடலங்கள் மீட்பு!
24 பங்குனி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 11658
கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் ஒருவரது சடலத்தையும், வீட்டின் ஜன்னலுக்கால் குதித்து தற்கொலை செய்துகொண்ட ஒருவரது சடலத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நேற்று மார்ச் 23 ஆம் திகதி சனிக்கிழமை இச்சம்பவம் பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. காலை 8 மணிக்கு ’ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக’ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது மடை ஓடு சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவர் வசிக்கும் வீட்டுச் சென்ற காவல்துறையினர், உள்பக்கமாக தாழிட்டிருந்த கதவினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தனர்.
அங்கு, பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்துகொண்டவரின் முன்னாள் மனைவியாக அவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதே வீட்டில் குண்டுகள் நிறைக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுறது.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan