ஜேர்மனியுடன் நட்பு ரீதியான போட்டி! - ’கோட்டைவிட்டது’ பிரான்ஸ்!
24 பங்குனி 2024 ஞாயிறு 07:11 | பார்வைகள் : 12353
நேற்று மார்ச் 23 ஆம் திகதி இடம்பெற்ற ‘பிரான்ஸ்-ஜேர்மனி’ அணிகளுக்கிடையிலான நட்பு ரீதியிலான போட்டியில் 0-2 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் தோல்வியடைந்தது.

Euro 2024 போட்டிகள் ஆரம்பமாக இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், கிட்டத்தட்ட அதே வீரர்களைக் கொண்ட அணி மிகவும் மோசமாக விளையாடியது. முதலாவது நிமிடத்திலேயே ஜேர்மனி வீரர் Florian Wirtz கோல் ஒன்றை விளாசினார்.
பின்னர் பிரான்ஸ் மேற்கொண்ட எந்த ஒரு முயற்சிகளும் பலனளிக்கவில்லை. பிரெஞ்சு அணி மிக மோசமாக விளையாடியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.
49 ஆவது நிமிடத்தில் ஜேர்மணி வீரர் Kai Havertz கோல் அடித்தார். ஆட்ட நேரம் முடிவுக்கு வந்த நிலையில் 0-2 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் தோல்வியுற்றது.
பிரெஞ்சு அணி ரசிகள் மேற்படி போட்டி குறித்து இணையத்தளத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.







திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan