தேவாலயத்துக்குள் மர்மப்பொதி! - வெளியேற்றம்!!
23 பங்குனி 2024 சனி 18:00 | பார்வைகள் : 10685
கைவிடப்பட்ட அல்லது மறந்து விட்டுச் செல்லப்பட்ட பொதிகள் மீதான பயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று மார்ச் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை தேவாலயம் ஒன்றில் அதுபோன்ற மர்மப்பொதி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Gap (Hautes-Alpes) நகர தேவாலயம் (cathédrale de Gap) இன்று காலை வெளியேற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் தேவாலயம் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.
தேவாலயத்தில் மர்மப் பொதி இருந்ததாகவும், அதையடுத்து அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டதாகவும், மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொதியை விட்டுச் சென்றவர் யார் என்பது தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படு வருகிறது. அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan