பாடசாலைகளை குண்டுவைத்துத் தகர்க்கும் எச்சரிக்கை!! கடும் பாதுகாப்பு!!

23 பங்குனி 2024 சனி 13:38 | பார்வைகள் : 11112
நேற்று வெள்ளிக்கிழமையும் இன்று சனிக்கிழமையும் Hauts-de-Franc இல் உள்ள பாடசாலைனகளிற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிற்கும் மாணவர்களிற்கும் பெற்றோர்களிற்குமான இலத்திரனியல் தகவல் மற்றும் பாடத் தொடர்பான ENT (Espaces numériques de travail) இலேயே இந்த வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக 22 பாடசாலைகள் வெடிவைத்துத் தகர்க்கப்படும் என்ற தகவல் ENT இல் விடுக்கப்பட்டுள்ளது.
பல பாடசாலைகளின் ENT சேவை வழங்கிகளின் இணைப்புகள் இலத்திரனியற் திருட்டிற்கு உள்ளாகி உள்ளது. இதன் மூலமே இந்த வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hauts-de-Franc இனைத் தொடர்ந்து இல்-து-பிரான்சின் ENT கணக்குகளும் திருடப்பட்டுள்ளன. இதன் மூலம் இல்-து-பிரான்சின் பாடசாலைகளிற்கும் வெடிகுண்டு எச்சரிக்கைள் ஆரம்பித்துள்ளன.
கடுமையான சைபர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அச்சப்படத் தேவையில்லை என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த எச்சரிக்கைகளை வெறுமனே தள்ளிவிட பயங்கரவாதத் தடைப்பிரிவினர் விரும்பவில்லை. இதனால் விசாரணைகளுடன், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025