கனடாவின் வான்கூவர் தீவுகளில் ஒரே நாளில் 2,000 நிலநடுக்கங்கள்

23 பங்குனி 2024 சனி 12:56 | பார்வைகள் : 8846
கனேடிய தீவொன்றில், இந்த மாத ஆரம்பத்தில், ஒரே நாளில் 2,000 முறைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத ஆரம்பத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஆனால், அது அச்சுறுத்தும் செய்தி அல்ல, அது ஒரு இயற்கை நிகழ்வு என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அந்த நிலநடுக்கங்கள் அனைத்துமே ரிக்டர் அளவில், 1க்கும் குறைவான அளவிலேயே பதிவானவையாகும்.
கடலுக்குக் கீழே உள்ள நிலப்பரப்பில், அதாவது கடல்படுகையில், இரண்டு புவித் தட்டுகள் மெதுவாக விலகும்போது, இரண்டு தட்டுகளுக்கும் இடையில் சுமார் 1 மீற்றர் நீளமான இடைவெளி உருவாகும்.
அந்த இடைவெளியை நிரப்புவதற்காக, பூமியின் மையப்பகுதியிலிருக்கும் எரிமலைக் குழம்பு மெதுவாக மேலே வந்து, உறைந்து அந்த இடத்தில் பாறையாக மாறி அமர்ந்துவிடுமாம்.
ஆக, புவித்தட்டுகள் விலகிய இடத்தில், ஒரு புதிய கடல் படுகை உருவாகிறது.
Seafloor spreading என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் காரணமாகவே இந்த சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1