பாதி எரிந்த நிலையில் உடலம் மீட்பு!!
23 பங்குனி 2024 சனி 11:06 | பார்வைகள் : 11600
பகுதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் உடலம் கோர்ஸ் தீவின் பஸ்தியா நகரில் ((Bastia - Haute-Corse) நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து, இந்த உடலம் ஜோந்தார்மினரால் மீட்கப்பட்டுள்ளது என, கோர்சின் சட்டவியல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இன்னமும் சாவிற்கான காரணமோ, குற்றச் செயலிற்கான தகவல்களோ பெறப்படவில்லை எனவும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் விசாணைகளின் பின்னரே மேலதிகத் தகவல்களை வழங்க முடியும் எனவும், ஜோந்தார்மினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan