Paristamil Navigation Paristamil advert login

தாத்தா பாட்டியிடம் குழந்தைகள் வளர்வது அவசியம் ஏன் தெரியுமா..?

தாத்தா பாட்டியிடம் குழந்தைகள் வளர்வது  அவசியம் ஏன் தெரியுமா..?

23 பங்குனி 2024 சனி 10:14 | பார்வைகள் : 8060


ஒரு காலத்தில் எல்லாருமே கூட்டுக் குடும்பமாக தான் வாழ்ந்து வந்தார்கள். வீட்டில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களை வளர்ப்பது பெரிய சிரமமாக இருக்கவில்லை. அதுவும், வீட்டு வேலை விவசாய வேலை போன்ற வேலைகளை பெற்றோர்கள் செய்தாலும் கூட குழந்தைகளை தாத்தா, பாட்டி தான் முழுவதுமாக கவனித்து வந்தனர். 

ஆனால், இப்போது அப்படி இல்லை. தாத்தா பாட்டி, கிராமங்களிலும், பெற்றோர் குழந்தைகளுடன் நகரங்களில் வளர்கிறார்கள். இதனால் தாத்தா பாட்டி அன்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டியின் பங்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது ஏன் என்று இப்போது பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியுடன் பிணைப்பு மிகவும் அவசியம். அவர்களுடன் இருந்தால் நல்ல மதிப்புகள் தெரியும். இரு தரப்பிலிருந்தும் அன்பைப் பெறுவது மட்டுமல்ல, அந்த அன்பின் மதிப்பும் அவர்களுக்குத் தெரியும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேசிப்பது போலவே, தாத்தா பாட்டி அன்பும் அவர்களுக்கு  நிபந்தனையற்றது. குழந்தைகள் அவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுகிறார்கள். அவர்களிடம் நல்ல பாதுகாப்பு கிடைக்கும். இது குழந்தைகளின் உணர்ச்சி நுண்ணறிவை வளர்க்க உதவும்.

குழந்தைக்கு பெற்றோரை விட தாத்தா பாட்டி தான் சிறப்பானதைக் கற்றுக் கொடுப்பார்கள். உதாரணமாக, நமது கடமைகள், பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் குழந்தைகளுக்கு விளக்கக் கூடியவர்கள் அவர்களே..

பெற்றோர் அலுவலக வேலைகளில் மும்முரமாக இருப்பதால் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. ஆனால், தாத்தா பாட்டியுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உள்ளது. அவர்கள்  வாழ்க்கைப் பாடங்களை நமக்கு கற்றுத் தருவார்கள். மேலும் அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் அவர்கள் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிறைய உதவுவார்கள்.

பெற்றோர்கள் எவ்வளவு ஜாலியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் தாத்தா பாட்டி அப்படி இல்லை. அவர்கள் எப்போதும் குழந்தைகளை மகிழ்விக்கவும், சிரிக்க வைக்கவும், தேவைப்பட்டால், விளையாடவும் விரும்புகிறார்கள். 

குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். தாய்மார்களுக்குத் தெரியாத பல பாரம்பரிய உணவுகள் பாட்டிகளுக்கு மட்டுமே தெரியும். அதுமட்டுமின்றி, தாத்தா பாட்டி குழந்தைகளுக்கு தோட்டக்கலை என பல விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். 

குழந்தைகள் குடும்ப விஷயங்களை அறிய வேண்டும் என்றால்,  அவர்கள் உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் அனைத்தையும் கற்க வேண்டும் என்றால், அவர்கள் தாத்தா பாட்டியிடம் வளர வேண்டும்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்