மீண்டும் இணையும் ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா கூட்டணி?

22 பங்குனி 2024 வெள்ளி 08:49 | பார்வைகள் : 8066
தமிழ்த் திரையுலகத்தின் முக்கியக் கலைஞர்கள் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குனர், நடிகர் பிரபுதேவா. இருவரும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி, வளர்ந்து இன்று இந்தியத் திரையுலகத்தில் முக்கிய புள்ளிகளாக இடம் பெற்றுள்ளனர்.
பிரபுதேவா கதாநாயகனாக நடித்த 'காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு,' படங்களுக்கு இசையமைத்தவர் ஏஆர் ரஹ்மான். அதன்பின்பு தமிழில் படங்களில் நடித்தும், இயக்கியும் மற்ற மொழிகளில் சில படங்களை இயக்கிய போதும் பிரபுதேவா, ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணையவேயில்லை.
சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாக உள்ள இப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்கள். மனோஜ் இப்படத்தை இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.