Paristamil Navigation Paristamil advert login

அவதானம் : உங்கள் தொலைபேசிகளுக்கு வரும் FR- எச்சரிக்கை!!

அவதானம் : உங்கள் தொலைபேசிகளுக்கு வரும் FR- எச்சரிக்கை!!

22 பங்குனி 2024 வெள்ளி 08:52 | பார்வைகள் : 12777


இன்று மார்ச் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு எச்சரிக்கை ஒலி ஒன்று அனுப்பப்பட உள்ளது.

FR-Alert என குறிப்பிடப்படும் இந்த எச்சரிக்கையானது அவசர நிலமையின் போது அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுவதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதன் பரிசோதனை முயற்சியாகவே இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள்ளாக விடுக்கப்பட உள்ளது.

இந்த பரிசோதனை முயற்சி இடம்பெறுவது இது மூன்றாவது முறையாகும். சென்ற மாதம் பெப்ரவரியின் பரிசின் பல பகுதிகளுக்கும், இல் து பிரான்சின் சில மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை ஒலி பரீட்சிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இந்த எச்சரிக்கை தொடர்பில் பொதுமக்கள் பயப்பிடத்தேவையில்லை எனவும் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உங்களுடைய தொலைபேசியில் இருந்து திடீரென சமிக்ஞை ஒலி எழும்பும். தொலைபேசியின் ஒலி அணைக்கப்பட்டிருந்தாலும் (silent) எச்சரிக்கை ஒலி எழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்