பரிஸ் : மீட்பு நடவடிக்கைக்குச் சென்ற காவல்துறை வீரர் மாரடைப்பில் பலி!
22 பங்குனி 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 17701
மீட்பு பணி ஒன்றுக்குச் சென்ற Bruno D. எனும் காவல்துறை வீரர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
மார்ச் 20 ஆம் திகதி புதன்கிழமை காலை பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் மீட்பு பணி ஒன்றுக்காகச் சென்றிருந்தார். படிக்கட்டின் ஏறும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. படிக்கட்டில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு விழ, SAMU மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், அவரை 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அது பலனின்றி நேற்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் உடன் பயணித்த காவல்துறை வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan