ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு! - ஒரு மாதத்தில் 150,816 சோதனை நடவடிக்கை!!
21 பங்குனி 2024 வியாழன் 21:00 | பார்வைகள் : 10762
ஒலிம்பிக் போட்டிகளுக்காக மிகத்தீவிரமான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமாக (150,816 ) சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார். காவல்துறையினர், உளவுத்துறையினர், ஜொந்தாமினர் மற்றும் இராணுவத்தினர் என பல பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது, நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 715 பேர் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
வாடகை வீடுகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், வாகனங்கள் வாடகைக்கு பெறுபவர்கள் போன்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan