€12.6 பில்லியன் யூரோக்கள் செலவில் A350 விமானங்களை வாங்கும் கொரிய நிறுவனம்!

21 பங்குனி 2024 வியாழன் 17:59 | பார்வைகள் : 14670
தென் கொரியாவைச் சேர்ந்த Korean Air விமான நிறுவனம் €12.6 பில்லியன் யூரோக்கள் செலவில் பிரான்சிடம் இருந்து புதிய விமானங்களை வாங்க உள்ளது.
உலகப்புகழ்பெற்ற A350 ரக விமானங்களையே குறித்த நிறுவனம் வாங்க உள்ளது. இதற்காக பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான Airbus நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மொத்தமாக 33 விமானங்களை அந்நிறுவனம் வாங்க உள்ளது. இவற்றில் இருபத்தி ஏழு - A350-1000s ரக விமானங்களும், ஆறு A350-900s ரக விமானங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A350 குடும்பத்தில் A350-1000s விமானமானது, அளவில் பெரியதும் அதிக திறன் கொண்டதுமாகும். 410 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரே தடவையில் 16,000 கிலோ மீற்றர் தூரம் பறக்கக்கூடியதாகும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1