வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொடருந்து தொழிற்சங்கம்!
21 பங்குனி 2024 வியாழன் 11:50 | பார்வைகள் : 12236
RATP தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஏப்ரல் 4 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. நிகர சம்பளத்தில் €100 யூரோக்கள் அதிகரிப்பினை கோரி இந்த வேலை நிறுத்தத்தை CGT தொழிற்சங்கத்தினர் மேற்கொள்ள உள்ளனர். ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்தை முடக்க உள்ளனர்.
RATP நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களை கொண்டுள்ள CGT தொழிற்சங்கம், இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து வரும் நாட்களிலும் தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
வருடத்துக்கு €1300 யூரோக்கள் மேலதிக ஊதியத்தை அவர்கள் கோரியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan