சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றம்! தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தல்
21 பங்குனி 2024 வியாழன் 10:11 | பார்வைகள் : 8245
சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாறிவருகின்றது.
இந்நிலையில் சில குறிப்பிட்ட பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் பிரச்சாரம் ஒன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்துள்ளது.
உஷ்ணம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக தொடர்ந்து, உன்னிப்பூச்சிகள் என்னும் ஒருவகை பூச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
Vaud மாகாண மருந்தகத் துறையினரான Christophe Berger என்பவர், செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் பலர் தங்கள் நாய்களின் உடலில் இந்த உன்னிப்பூச்சிகள் உருவாகத் துவங்கியுள்ளதைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த உன்னிப்பூச்சிகளால் உருவாகும் நோய்களைத் தடுப்பதற்காகக் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் அவர், தடுப்பூசியின் விலை 80 சுவிஸ் ஃப்ராங்குகள்தான் என்றும், அது காப்பீட்டில் உள்ளடங்கும் என்றும், அந்த தடுப்பூசி மருந்தகங்களிலேயே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
வாக்கிங் செல்வோர் கவனமாக இருக்குமாறும், உடலை முழுமையாக மறைக்கும் மற்றும் வெளிர் வண்ண உடைகள் உடுத்திக்கொள்ளுமாறும், பூச்சிகளை துரத்துவதற்காக ஸ்பிரேயை பயன்படுத்துமாறும் ஆலோசனை கூறுகிறார் Christophe Berger.


























Bons Plans
Annuaire
Scan