இளையராஜாவின் வாழ்க்கை வரலாறுதிரைப்படத்தில் கமல்

21 பங்குனி 2024 வியாழன் 09:24 | பார்வைகள் : 6622
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'இளையராஜா’ என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை ’கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இல்லை என்றாலும் மற்ற டெக்னீசியன்கள் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தின் ஆரம்ப விழாவில் கமல்ஹாசன், பாரதிராஜா உட்பட சில சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பழம்பெரும் இயக்குனர் சங்கீதம் சீனிவாச ராவ் அவர்களை கௌரவிக்கும் விழாவை கமல்ஹாசன் நடத்தி வருகிறார் என்பதும் ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்படம் குறித்து இந்த விழாவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்று நடந்த ’மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் விழாவில் கமல்ஹாசன், இளையராஜா, சிங்கீதம் சீனிவாசராவ் கலந்து கொண்ட போது கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ’இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது நான் தான் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து 'இளையராஜா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025