அயர்லாந்து பிரதமர் ராஜினாமா
21 பங்குனி 2024 வியாழன் 09:19 | பார்வைகள் : 9441
அயர்லாந்தின் பிரதமர் லியோ வராத்கர், அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
45 வயதான லியோ வராத்கர் 2022 ஆம் ஆண்டு முதல் அயர்லாந்தின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலத்திலும் அவர் பிரதமராக பதவி வகித்தார்.
இந்நிலையில், ஆளும் பினா கய்ல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள லியோ வராத்கர், புதிய பிரதமர் தெரிவானவுடன் பிரதமர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan