ரஜினியை சந்திக்கிறாரா விஜய்?
                    20 பங்குனி 2024 புதன் 16:31 | பார்வைகள் : 7136
ரஜினிகாந்த் நாளை ’வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருக்கும் விஜய் அவரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் குறித்து ஆலோசனை செய்வார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பை காண விஜய் ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு தளமே பரபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் நாளை திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திருவனந்தபுரத்தில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலில் தான் ரஜினிக்கும் தங்குவதற்கு அறை ரிசர்வ் செய்யப்படும் என்றும் கூறப்படுவதால் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை இது நடந்து ரஜினியை விஜய் சந்தித்தால் அரசியல் மற்றும் சினிமா குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு சந்திப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan