Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் காலநிலை மாற்றம்.... 147 பலி!

அமெரிக்காவில் காலநிலை மாற்றம்....  147 பலி!

10 ஆவணி 2023 வியாழன் 06:26 | பார்வைகள் : 11308


அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது.

இந்த அதீத வெப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக  அமெரிக்க வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தினால் அமெரிக்காவின் 03 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி அரிசோனா, நெவாடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள்.

அரிசோனா மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெவாடாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 என்றும், டெக்சாஸ் மாகாணத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்