ரஷ்யாவில் 9,000 குழந்தைகள் வெளியேற்றம்

20 பங்குனி 2024 புதன் 06:18 | பார்வைகள் : 7721
ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து, சுமார் 9,000 சிறுவர் சிறுமிகள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளிியாகியுள்ளது.
ரஷ்ய நகரமான Belgorod மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலிருந்து சுமார் 9,000 சிறுவர் சிறுமிகள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
உக்ரைன் குண்டு வீசிக்கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அப்பகுதி கவர்னரான Vyacheslav Gladkov தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, 1,200 பிள்ளைகள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அவர்.