France Travail இணையத்தளத்தை ‘ஹக்’ செய்த மூவர் கைது!
19 பங்குனி 2024 செவ்வாய் 15:30 | பார்வைகள் : 13485
France Travail இணையத்தளத்தை முடக்கி, 43 மில்லியன் பேர்களது தனிப்பட்ட விபரங்களை திருடிய மூவர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இக்கைது சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 22 தொடக்கம் 24 வயதுடைய மூவர் கடந்த வாரம் பிரான்ஸ் திறவாய் (France Travail) இணையத்தளத்தை ‘ஹக்’ செய்திருந்தார்கள். பின்னர் அங்கிருந்த 43 மில்லியன் பேர்களது விபரங்களை திருடியிருந்தார்கள்.
அதில் பெயர், பிறந்த திகதி, ஆண்டு, தொலைபேசி இலக்கம், முகவரி, மின்னஞ்சல் போன்ற விபரங்களை திருடியுள்ளனர். வங்கி விபரங்கள் திருடப்படவில்லை எனவும், அது பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan