La Courneuve : காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி பலியான இளைஞனுக்கு ஆதரவாக - அமைதி பேரணி!
19 பங்குனி 2024 செவ்வாய் 12:12 | பார்வைகள் : 14586
காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி கொல்லப்பட்ட Wanys எனும் இளைஞனின் சாவுக்கு நீதி கேட்டு நாளை மறுநாள் வியாழக்கிழமை அமைதிப்பேரணி ஒன்று இடம்பெற உள்ளது.
Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தது. ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த குறித்த இளைஞன் காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதுண்டு பலியாகியிருந்தார். அவரின் இந்த சாவுக்கு எதிராக அவரின் பெற்றோர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
அதேவேளை, Aubervilliers, La Courneuve நகர காவல்நிலையங்கள் மீது தாக்குதல்களும் இடம்பெற்றன.
இந்நிலையில், குறித்த இளைஞனின் சாவுக்கு நீதிகேட்டு மார்ச் 21 ஆம் திகதி வியாழக்கிழமை La Courneuve நகரில் அமைதிப்பேரணி ஒன்று இடம்பெற உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan