Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் புதிய கொரோனா திரிபு

கனடாவில் புதிய கொரோனா  திரிபு

10 ஆவணி 2023 வியாழன் 05:56 | பார்வைகள் : 10790


அமெரிக்காவில் அதிக அளவு தீவிரமாக பரவி வரும் ஓர் கோவிட் திரிபு கனடாவையும் தாக்கியுள்ளது.

கனடாவின் ஒன்றாடியோ மாகாணத்தில் இந்த புதிய கொரோனா தொற்று திரிபு தொடர்பில் பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

EG.5 என்ற இந்த கோவிட் திரிபானது ஒமிக்ரான் தெருவின் ஓர் பிரிவு என தெரிவிக்கப்படுகிறது.

மொத்த கோவில் திரிபு பரவுகையில் 35 சதவீதமானவை இந்த வகை திரிபினால் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் கனடாவிலும் இந்த வைரஸ் தொற்று அதிகரிக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்