3 வயது பிரித்தானிய குழந்தைக்கு Pica நோய்...!
19 பங்குனி 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 14222
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனித்துவமான சவாலை எதிர்கொண்டு வருகிறார்.
அவரது 3 வயது மகளான விண்ட்டர் (Wynter) பைகா (pica) என்ற அரிய வகை உணவுப் பழக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பொருட்கள் அல்லாதவற்றை உண்ணத் தூண்டும் ஒரு அரிய பசி பாதிப்பு ஆகும்.
மன இறுக்கம் (Autism) உடன் இணைந்து, அத்துடன் அது அவரது தாயார் ஸ்டேசி ஏ'ஹேர்ன் (Stacey A'Hearne) அவர்களுக்கு தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக தொலைகாட்சி ஒன்றுக்கு ஸ்டேசி ஏ'ஹேர்ன் பேசிய போது, விண்ட்டரை பாதுகாப்பாக வைத்திருப்பதையே மையமாகக் கொண்டு தனது உலகம் சுழல்வதாக தெரிவித்துள்ளார்.
பைகா (Pica)
பைகா (pica) என்பது மரம், கண்ணாடி, மற்றும் மண் போன்ற உணவுப் பொருட்கள் அல்லாதவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும்.
விண்ட்டரின் விஷயத்தில், சுவரில் உள்ள பூச்சு முதல் சோபா குஷன் மற்றும் உடைந்த கண்ணாடி வரை எதுவும் இவரது இலக்காக மாற வாய்ப்புள்ளது.
உயர் நாற்காலி, தொட்டில் மற்றும் போர்வை போன்ற பரிச்சயமான பொருட்களும் கூட கண்காணிப்பில் இல்லாத நேரங்களில் ஆபத்தானவை ஆகின்றன.
பைகா (pica) என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், மேலும் இதை முழுமையாக புரிந்து கொள்ள மருத்துவர்கள் இன்னும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பைகா (pica) என்பது ஒரு கெட்ட பழக்கம் அல்ல, ஆனால் ஒரு மருத்துவ நிலை என்பதை கவனிப்பது அவசியம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan