விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…
18 பங்குனி 2024 திங்கள் 11:46 | பார்வைகள் : 2767
நடிகை அருந்ததி நாயர் நேற்று தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்து சுமார் ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் இருந்ததாகவும் சாலையில் சென்றவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து உடனடியாக அவர்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மருத்துவரின் கண்காணிப்பில் 24 மணி நேரமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.