Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவில் கடும் மழை - 33 பேர் பலி

தென் கொரியாவில் கடும் மழை - 33 பேர் பலி

16 ஆடி 2023 ஞாயிறு 06:21 | பார்வைகள் : 15104


தென் கொரியாவில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. 

தென் கொரியாவில் வெள்ளம், மண்சரிவுகளால் குறைந்தபட்சம் 33 பேர் பலியாகியுள்ளனர். 

10 பேர் வரை மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ரயில் சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் பெரும்பாலானோர் மண்சரிவுகளில் சிக்கியும் வெள்ளம் நிறைந்த நீர்நிலைகளில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வட பிராந்தியத்தியத்திலுள்ள ஜியோங்சாங் மாகாணத்தில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோசான் நகரில் அணைக்கட்டு ஒன்று நிறைந்து வழிந்ததால் 6,400 பேரை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தென் கொரியா முழுவதும் நேற்று பிற்பகல் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்