Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் சில எயார் ப்ரையர்கள் மீள அழைப்பு

கனடாவில் சில எயார் ப்ரையர்கள் மீள அழைப்பு

17 பங்குனி 2024 ஞாயிறு 13:54 | பார்வைகள் : 8383


கனடாவில் விற்பனையாகும் சில எயார் ப்ரையர் (air fryers ) வகைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Insignia பண்டக் குறியைக் கொண்ட சில வகை எயார் ப்ரையர்களே இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளன.

இந்த வகை எயார் ப்ரையர்கள் தீப்பற்றிக் கொள்வதாகவும் அதிகளவு வெப்பமாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எயார் ப்ரையர்களினால் எவருக்கும் காயங்கள் இதுவரையில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த மாடல்களை அந்த நிறுவனம் மீள பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து மாடல்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை எயார் ப்ரையர்களை பயன்படுத்துவோர் இணைய வழியில் தாங்கள் பயன்படுத்தும் சாதனம் பற்றிய விபரங்களை பதிவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்