Paristamil Navigation Paristamil advert login

IPL போட்டி துபாய்க்கு மாற்றப்படுமா? இடமாற்றம் குறித்து BCCI விளக்கம்

IPL போட்டி துபாய்க்கு மாற்றப்படுமா? இடமாற்றம் குறித்து BCCI விளக்கம்

17 பங்குனி 2024 ஞாயிறு 12:52 | பார்வைகள் : 6247


2024 IPL போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என வெளியான தகவல் குறித்து BCCI விளக்கம் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்குகிறது. 

7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் திகதி நிறைவடைகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் திகதி வெளியாகும்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் 2024 போட்டி துபாய்க்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் பிசிசிஐ தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. 

2024 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும், இதில் எந்த இடமாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஐபிஎல் 2024 போட்டிகள் முழுவதுமாக இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. 

இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் அட்டவணைப்படி இந்தியாவில் நடைபெறும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல மாட்டோம் என்று அவர் கூறினார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்