Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

9 ஆவணி 2023 புதன் 14:30 | பார்வைகள் : 12053


இலங்கையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது உகந்தது அல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்த்து, கண்ணாடி அல்லது தரமான போத்தல்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு போதுமான சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் அவசியமென லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்

வர்த்தக‌ விளம்பரங்கள்