ஜாக்கி சான் புகைப்படத்தைப் பார்த்து திகைத்த ரசிகர்கள்!
 
                    16 பங்குனி 2024 சனி 11:17 | பார்வைகள் : 10909
எழுபது வயதை நெருங்கும் நடிகர் ஜாக்கி சானின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘நம்ம ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா?’ என இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திகைத்த ரசிகர்கள் இணையத்தில் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
ஹாலிவுட் படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஜனரஞ்சகமாகாத காலத்திலேயே பல 90’ஸ் கிட்ஸூக்குப் ஆதர்ச ஆக்ஷன் நாயகனாக இருந்தவர் நடிகர் ஜாக்கி சான். சிக்ஸ் பேக் வைத்த உடல், முறுக்கேற்றிய கைகள், மழலை கொஞ்சும் முகம் என தனது அதிரடி ஆக்ஷன்களுக்குப் பெயர் போனவர் ஜாக்கி சான்.
சண்டை என்றால் எதிராளிகளை இரத்தம் சொட்ட சொட்ட அடிப்பது மட்டுமே என்றில்லாமல் ஆக்ஷன்களில் நகைச்சுவையும் சேர்த்து ரசிக்க வைக்கலாம் என சுவாரஸ்யமாக்கியவர் ஜாக்கி. இவரது ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பட்டி தொட்டியெங்கும் இவரில் பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது என்றால் மிகையில்லை. புரூஸ்லி படங்களில் துணை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய ஜாக்கி பின்பு ஸ்டண்ட் மாஸ்டராக மாறினார். இவர் நடிகராக அறிமுகமான முதல் படம் ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’தான்.
ஆக்ஷன் என பெயருக்கு மட்டும் படங்களில் நடிக்காமல் நிஜத்திலும் இவருக்கு தற்காப்பு கலைகள் பலவும் அத்துப்படி. ‘நாங்க அடி வாங்காத ஏரியாவே இல்ல’ என சொல்லும் அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் பலவற்றில் அவரது உடலெங்கும் பல அடிகளும், காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. ’ரஷ் ஹவர்’, ‘கராத்தே கிட்’ என இவரது பெயர் சொல்லும் படங்கள் ஏராளம். இவரது சாகசங்களை குழந்தைகளிடம் சொல்லும் பல கார்ட்டூன்களும் வந்திருக்கிறது.
இப்படி தாங்கள் பார்த்து ரசித்த ஆதர்ச நாயகனுக்கு வயதாகி விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இணையத்தில் குமுறி வருகின்றனர் ரசிகர்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வயதான ஜாக்கி சானைப் பார்த்துத் திகைத்துப் போன ரசிகர்கள் இதை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என சொல்லி வருகின்றனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan