Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : காவல்துறையுடன் மோதி இளைஞன் பலி! - குடும்பத்தினர் வழக்குப்பதிவு!

Aubervilliers : காவல்துறையுடன் மோதி இளைஞன் பலி! - குடும்பத்தினர்  வழக்குப்பதிவு!

16 பங்குனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 12369


கடந்த புதன்கிழமை Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் காவல்துறையினர் மகிழுந்துடன் மோதுண்டு 18 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த இளைஞனின் பெற்றோர்கள் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ஸ்கூட்டர் ஒன்றில் குறித்த இளைஞன் பயணித்த நிலையில், காவ்லதுறையினரின் மகிழுந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞன் சிகிச்சை பலனின்றி பலியாகியிருந்தார்.

இந்நிலையில், ‘வேண்டுமென்றே மரணத்துக்கு வழிவகுக்கும் வன்முறை ஒன்றை ஏற்படுத்தி அவர் கொல்லப்பட்டுள்ளார்’ என அவர்களது குடும்பத்தினர் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் IGPN அதிகாரிகள், சம்பவம் இடம்பெற்ற நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கமராக்களிலும் பதிவான காட்சிகளை அலசி வருகின்றனர். 

சம்பவம் தொடர்பான மிக துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கு காவல்துறையினர் மீது பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்