◉ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஏழு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!
15 பங்குனி 2024 வெள்ளி 16:29 | பார்வைகள் : 15596
கடந்த சனிக்கிழமை Gard மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன், ஏழு நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் பிரான்சின் தெற்கு பகுதியை கடும் புயல் மற்றும் மழை வெள்ளம் சூறையாடியிருந்தது. அதன்போது தந்தை, அவரது 4 மற்றும் 12 வயதுடைய பிள்ளைகளுடன் பயணித்த மகிழுந்து புயலில் சிக்குண்டு ஆற்றில் அடித்துச் சென்றிருந்தது.
அவர்கள் தேடப்பட்ட நிலையில், தந்தை மற்றும் 4 வயது மகனின் சடலங்கள் முன்னதாக மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 12 வயதுடைய இரண்டாவது மகனின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புயல் வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan