ஹீரோயின் ஆன பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்
15 பங்குனி 2024 வெள்ளி 14:15 | பார்வைகள் : 10246
ரஜினியின் 2.0, கமலின் விக்ரம், விஜய்யின் லியோ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் மாயா கிருஷ்ணன். இதில், விக்ரம் படத்தில் விலைமாதுவாக தோன்றினார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மாயாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ராம்ஸ் என்பவர் ஹீரோவாக நடிக்கும் ‛பைட்டர் ராஜா' என்ற படத்தில் மாயாவுக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சில இயக்குனர்களிடத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் மாயா கிருஷ்ணன்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan