Paristamil Navigation Paristamil advert login

இரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்! - வாக்குச்சாவடியில் திரையிடப்பட்ட மக்ரோனின் நேர்காணல்!!

இரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்! - வாக்குச்சாவடியில் திரையிடப்பட்ட மக்ரோனின் நேர்காணல்!!

15 பங்குனி 2024 வெள்ளி 13:03 | பார்வைகள் : 3344


இரஷ்யாவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று வருகிறது. இன்று மார்ச் 15, வெள்ளிக்கிழமை காலை முதல் அங்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலை, இரஷ்யாவில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  வாக்குச்சாவடிகளில் இந்த நேர்காணல் ஒளிபரப்பப்படுவதை சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி தனது நேர்காணலில், 'இரஷ்யா இந்த யுத்தத்தில் வென்றால் ஐரோப்பா தனது பாதுகாப்பை இழக்க நேரிடும்!' என தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நாம் இரஷ்யாவுடன் போர் புரியவில்லை. ஆனால் இரஷ்யாவை வெற்றி பெறச் செய்யாமல் தடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்