அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி...

15 பங்குனி 2024 வெள்ளி 12:26 | பார்வைகள் : 6438
நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர் பிரார்த்தித்து வருகின்றனர்.
’பிக் பி’ என பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அமிதாப்பச்சன். 81 வயதிலும் மிகவும் ஆக்டிவாக திரைப்படங்களில் நடித்து வருவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என இருக்கிறார். இவர் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
காலில் ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அமிதாப்பச்சனுக்கு நடந்திருக்கிறது. இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் வெளியானதும் பலரும் அமிதாப்பச்சன் ஆபத்தான நிலையில் இருப்பதாக வதந்தி பரப்பி வந்தனர்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமிதாப் தனது எக்ஸ் பக்கத்தில், ‘எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். இதன் மூலம் இவர் சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்ற தகவலை ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீக்கிரம் முழுமையாக குணமடைய வேண்டும் எனவும் அவர்கள் கமென்ட்டில் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.தமிழில் ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் கேமியோவில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025