கடலில் விழுந்து உயிரிழந்த அகதி! - பிரெஞ்சு அரசிடம் இழப்பீடு கோரிக்கை!
15 பங்குனி 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 12182
கடந்த 2021 ஆம் ஆண்டு 27 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், குறித்த படகு கடலில் மூழ்கி அதில் பயணித்த அனைவரும் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த அகதிகளில் ஒருவரின் குடும்பத்தினர், பிரெஞ்சு அரசிடம் இழப்பீடு கோரிக்கை முன்வைத்துள்ளனர். எதியோப்பியாவைச் சேந்த குறித்த அகதியின் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரான்சில் அகதிகளாக உள்ள நிலையில், இராணுவ படையினர் கடலில் பயணித்தவர்களை முறையாக காப்பாற்ற முயற்சிக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவரது உயிரிழப்புக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவரின் இந்த கோரிக்கைக்கு அகதிகள் நலனுக்காக இயங்கிவரும் Utopia 56 மற்றும் Ligue des Droits de l'Homme போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Lille மாவட்ட நிர்வாக நீதிமன்றத்தில் இந்த இழப்பீடு கோரிக்கை சமப்பிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan