கனடாவில் வீடொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
15 பங்குனி 2024 வெள்ளி 09:26 | பார்வைகள் : 9283
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடியிருப்பு ஒன்றில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை தாக்கியதாக பொலிஸாருக்கு நபர் ஒருவர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபரை பொலிஸர்ர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கொலை செய்ததாக கூறியவரும் கொலையுண்ட பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்திருதுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan