Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் போது இல்-து-பிரான்சை விட்டு வெளியேறும் 47% மக்கள்! - ஒரு அதிர்ச்சி தகவல்!

ஒலிம்பிக் போட்டிகளின் போது இல்-து-பிரான்சை விட்டு வெளியேறும் 47% மக்கள்! - ஒரு அதிர்ச்சி தகவல்!

14 பங்குனி 2024 வியாழன் 14:50 | பார்வைகள் : 13530


ஒலிம்பிக் போட்டிகளின் போது இல் து பிரான்சுக்குள் வசிக்கும் இரண்டில் ஒருவர் இங்கிருந்து வெளியேற உள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல இலட்சம் வெளிநாட்டவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், , இல் து பிரான்சுக்குள் வசிக்கும் மக்கள் இப்போட்டிகள் தொடர்பில் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுகிறது.



கிட்டத்தட்ட இரண்டில் ஒருவர் அல்லது 47% சதவீதமான மக்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தின் போது இல் து பிரான்சை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் பரிசுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை எனவ்உம் தெரிவித்து, அங்கிருந்து வெளியேற தீர்மானித்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பை கடந்த இரண்டு நாட்களில் Ipsos நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்