Réau : சிறைச்சாலை அதிகாரிகள் ஆறு பேர் கைது!!
14 பங்குனி 2024 வியாழன் 10:32 | பார்வைகள் : 21634
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி ஆறு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இல் து பிரான்சின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் Réau (Seine-et-Marne) சிறைச்சாலையில் பணிபுரியும் அதிகாரிகள் அறுவரே கைது செய்யப்பட்டவர்களாவர். அவர்கள் சிறைக்கையிகளுக்கு போதைப்பொருள், சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றை பணம் பெற்றுக்கொண்டு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், மார்ச் 12 செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதே சிறைச்சாலையில் தான் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும், கொலையாளியுமான Redoine Faid (46 வயது) சிறைவைக்கப்பட்டிருந்தார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலையில் அவர் சிறையில் இருந்து உலங்குவானூர்தி ஒன்றின் உதவியுடன் தப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan