Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இரு பிள்ளைகளை கொன்று​விட்டு தந்தை எடுத்த முடிவு

இலங்கையில் இரு பிள்ளைகளை கொன்று​விட்டு தந்தை எடுத்த முடிவு

14 பங்குனி 2024 வியாழன் 09:29 | பார்வைகள் : 6401


தனது இரு பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்க்க முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம், இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று விட்டே, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த முஹம்மது மிர்சா முஹம்மது கலீல் (வயது 63) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது 29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 15) ஆகியோர்   உயிரிழந்தவர்களாவர். அந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டார்.

சம்பவம்  தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே. வீரசிங்க வழிநடத்தலில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்