இலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூடுகள் - இரண்டரை மாதத்தில் 21 பேர் பலி
14 பங்குனி 2024 வியாழன் 02:32 | பார்வைகள் : 8602
2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan