பரிஸ் : கடிதம் எழுதி வைத்துவிட்டு மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து சிறுவன் பலி!
13 பங்குனி 2024 புதன் 15:32 | பார்வைகள் : 12372
12 வயதுடைய சிறுவன் ஒருவன், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இச்சம்பவம் நேற்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard Garibaldi கட்டிடத்தொகுதியில் உள்ள வீடொன்றில் தனது பெற்றோருடன் வசிக்கும் சிறுவன் ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக தனது தந்தையுடன் வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்ததாகவும், அது தொடர்பாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

























Bons Plans
Annuaire
Scan