Paristamil Navigation Paristamil advert login

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகிறாரா ...?

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகிறாரா ...?

13 பங்குனி 2024 புதன் 15:27 | பார்வைகள் : 5629


அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனபோதிலும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது என்றும் படபிடிப்பை இன்னும் ஒரு மாதத்திற்கு நிறுத்த லைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித்துக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தாமதமாகலாம் என்றும் ஒருபுறம் கூறினாலும் அடுத்த வாரம் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப் போவதாக இன்னொரு புறம் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுகளை கேட்டு கேட்டு சலித்து போய்விட்ட நிலையில் தற்போது அப்டேட் கேட்பதையே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர் என்று கூறலாம். இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நாளை ’விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் முந்தைய படங்களான ’வலிமை’ ’துணிவு’ ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அதிரடியாக வெளியானது போலவே ’விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்