இலங்கையில் தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்

13 பங்குனி 2024 புதன் 11:39 | பார்வைகள் : 12401
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025