Essonne : பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய காவல்துறை வீரர் தலைமறைவு!

12 பங்குனி 2024 செவ்வாய் 17:55 | பார்வைகள் : 13387
காவல்துறை வீரர் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.
45 வயதுடைய Xavier P எனும் காவல்துறை வீரர் Essonne மாவட்டத்தில் பணிபுரிகிறார். 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் அவர் மூன்று பெண்கள் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இரண்டு மாதங்களின் பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பரிசோதிக்கப்படுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
direction de l'ordre public et de la circulation வீரராக பணிபுரியும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமறைவாகியுள்ள அவர், தேடப்பட்டு வருகிறார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025