முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் 'பிரேமலு' நாயகி ?

12 பங்குனி 2024 செவ்வாய் 13:57 | பார்வைகள் : 7493
சூப்பர் ஹிட் திரைப்படமான ’பிரேமலு’ என்ற படத்தின் நாயகி மமிதா பாஜுவுக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் குறிப்பாக முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை மமிதா பாஜு. இவர் சமீபத்தில் ’பிரேமலு’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்த படம் சத்தம் இல்லாமல் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ’பிரேமலு’ நாயகி மமிதா பாஜு ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் ’ரிபெல்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படம் தான் ’ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்றும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பாஜு தான் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி ’பிரேமலு’ படத்தின் வெற்றி காரணமாக தமிழில் இன்னும் அவருக்கு சில வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க அவர் ஒப்புக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நயன்தாரா உள்பட பல கேரள நடிகைகள் தமிழில் பல படங்களில் நடித்த நிலையில் தற்போது மமிதா பாஜுவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1