Paristamil Navigation Paristamil advert login

Argenteuil : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! - மகிழுந்தினால் சத்தம் எழுப்பியதால் ஆத்திரம்!

Argenteuil : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! - மகிழுந்தினால் சத்தம் எழுப்பியதால் ஆத்திரம்!

12 பங்குனி 2024 செவ்வாய் 11:44 | பார்வைகள் : 10081


மகிழுந்தில் இருந்து அதிக ஒலி எழுப்பப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞன் ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். இதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில்  இச்சம்பவம் Argenteuil (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து சாரதி ஒருவர் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட 21 வயதுடைய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

குறித்த இளைஞன் அதே பகுதியில் வசிப்பதாகவும், மகிழுந்து அதிக சத்தம் எழுப்பிக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் ஆத்திரத்தில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDPJ 95 காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்